தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இவர் தமிழ் சினிமாவைத் தாண்டி பாலிவுட் அளவு பேசப்படும் ஒரு நபராக இருக்கிறார். இவரது சினிமா வாழ்க்கையின் வயதானது நம்மில் பல பேரின் வயதாக இருக்கக்கூட வாய்ப்பில்லை.
ஆமாங்க இவரது சினிமா வாழ்க்கையின் வயது 45, பேருந்து நடத்துனராக பணியாற்றிய இவர் சென்னைக்கு வந்தபோது இவருக்கு முதல் வாய்ப்பினைக் கொடுத்தவர் கே.பாலச்சந்தர்.
1975 ம் ஆண்டு அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்த அவருக்கு தொடர் வாய்ப்புகள் அமைய விறுவிறுவென முன்னேறினார். இவர் நடித்த படங்களில் கே.பாலச்சந்தர் படங்களே பெரும்பான்மையானவை. அவையெல்லாம் அக்காலத்திலேயே 100, 200 நாட்கள் தாண்டி ஓடியவை.
சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் குடிப்பழக்கத்தினை விட்டது எப்படி என ஒரு பேட்டியில் ரஜினி கூற, அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது, “நான் வீட்டில் குடித்துவிட்டு இருந்தபோது, இயக்குனர் பாலசந்தர் படப்பிடிப்பு உள்ளது என்று கூற, ஸ்பிரே அடித்துக்கொண்டு போனேன். ஆனால் அவரோ நான் உள்ளே போனதும் கண்டுபிடித்துவிட்டார். அவர் என்னிடம் நாகேஷ் மிகப் பெரிய ஆர்டிஸ்ட், ஆனால் குடி அவர் வாழ்க்கையை பாழாக்கியது. இனிமே குடிச்சிட்டு ஷூட்டிங் வந்தா செருப்பாலேயே அடிப்பேன் என்றார். அன்றோடு குடிப்பழக்கத்திற்கு முழுக்குப் போட்டேன்” என்று கூறியுள்ளார்.