பருத்திவீரன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் கார்த்தி. அண்ணன் சூர்யா அப்பா சிவக்குமார் என பெரிய கலைக்குடும்பத்து வாரிசாக இருந்தாலும், தனக்கென நக்கலான பாணியில் ஆக்சன் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் கார்த்தி.
முதல் படமே பெரிய வெற்றி . தொடர்ந்து பையா, சிறுத்தை என சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்த இவர் சில வருடங்களாக நடித்த படங்கள் பெரிய அளவில் பேசப்படவில்லை.
இருந்தாலும் கார்த்தியின் அசத்தலான சிரிப்புடன் கூடிய நடிப்பு ,பார்வை அனைவரையும் கவர்ந்தது. இவருக்கு பெண்கள் ரசிகர்கள் கூட்டம் அதிகம்.
இரண்டு வருடம் முன் வந்த கடைக்குட்டி சிங்கம், கடந்த வருடம் வெளியான கைதி பட வெற்றியின் மூலம் கார்த்தியின் சினிமா கிராஃப் மீண்டும் ஏறியுள்ளது.
இன்று கார்த்தியின் பிறந்த நாள் அதனால் அவருக்கு சினிமா பிரபலங்கள் பலரிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.