சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா திரைப்படத்தில் பிளாஷ்பேக் காட்சிகளில் நடிகர் சிவகார்த்திகேயன் சிங்கம்பட்டி ஜமீன்தார் கேரக்டரில் நடித்து அசத்தி இருப்பார் என்பது தெரிந்தது
இந்த நிலையில் இன்று காலை சிங்கம்பட்டி ஜமிந்தார் அவர்கள் காலமான செய்தியை அறிந்ததும் நடிகர் சிவகார்த்திகேயன் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார் அதில் அவர் கூறி இருப்பதாவது: சிங்கம்பட்டி சீமராஜாவாக நடித்ததற்கு எப்போதும் பெருமை கொள்வேன் அய்யா! அய்யாவின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும்,சிங்கம்பட்டி மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்’என்று கூறியுள்ளார்.
மேலும் சீமராஜா படத்தின் படப்பிடிப்பின்போது சிங்கம்பட்டி ஜமீன்தார் அவர்களை சிவகார்த்திகேயன் மற்றும் சூரி சந்தித்ததாகவும் இந்த சந்திப்பின் போது எடுத்த புகைப்படத்தையும் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது