க/பெ.ரணசிங்கம் படக்குழுவினருக்கு கவிஞர் வைரமுத்துவின் பாராட்டுக் கவிதை!!

பெ.விருமாண்டி இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள க/பெ.ரணசிங்கம் படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று முன் தினம் ரிலீஸ் ஆனது. இப்படத்தில் கவுரவ நடிகர் விஜய் சேதுபதி நடித்து இருந்தாலும், ஐஸ்வர்யா ராஜேஷ்க்கே முக்கியத்துவம்…

பெ.விருமாண்டி இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள க/பெ.ரணசிங்கம் படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று முன் தினம் ரிலீஸ் ஆனது. இப்படத்தில் கவுரவ நடிகர் விஜய் சேதுபதி நடித்து இருந்தாலும், ஐஸ்வர்யா ராஜேஷ்க்கே முக்கியத்துவம் இருக்கும் என்று தெரிகிறது.

நேற்று முன் தினம் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பினைப் பெற்று வருகின்றது. தண்ணீர் பிரச்சினை, கார்பரேட், விவசாயம், அரசியல் என வழக்கமான கதைப்பாணியாக இருந்தாலும் திரைக்கதையில் அழுத்தமாக சொல்லி இருக்கிற விதம் கூடுதல் சிறப்பு.

12feb028a9a26289ab56a2b6fed9045d

சிட்டிசன் பட பாணியில் அதிகாரமிக்க வர்க்கத்தினரிருக்கு இயலாத மக்களின் நிலைமையினை புரியவைக்க நினைக்கு போராட்டம் என்பது ட்ரெய்லரிலேயே புரிகிறது. அறம் படத்தினை உருவாக்கிய அதே குழு இந்தப் படத்தையும் உருவாக்கியதால் நிச்சயம் ஹிட் அடிக்கும் என்று தெரிகிறது, இது வெளியான ஒரே நாளில் பல லட்சக்கணக்கிலான பார்வைகளைப் பெற்றுள்ளது.

இந்தப் படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி, கோலிவுட் பிரபலங்கள் மத்தியிலும் வைரலாகி வருகின்றது. நேற்று கவியரசு வைரமுத்து இந்த படத்தினைத் தன்னுடைய கவிதை பாணியில் பாராட்டியுள்ளார்.

அதாவது, “நல்ல கலைகளெல்லாம்

மனிதகுலத்தின் வலியிலிருந்து வழிந்தவை.

இந்தப் படம் இன்னொரு வலி.

இது வெற்றிபெறக் கூடும் என்று

என் நம்பிக்கை நரம்பு துடிக்கிறது.

பார்ப்போம்..” என்று பதிவிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன