இன்றைய தினம் காலையில் பெரும் அதிர்ச்சியான தகவல் ஒன்று கிடைத்தது. அதன்படி நம் தமிழகத்தில் இளம் டேபிள் டென்னிஸ் வீரர் மேகலாயாவில் சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்ததாக தெரிகிறது.
அவரோடு பயணித்த 3 வீரர்களும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் காரை ஓட்டிச் சென்ற ஓட்டுநரும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது.
இதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். அதோடு மட்டுமில்லாமல் நம் தமிழகத்தின் ஆளுநர் ரவியும் இரங்கல் தெரிவித்தார். 83 ஆவது சீனியர் தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க சென்ற போது திடீரென்று எதிரே வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வாகனத்தில் மோதியதாக தெரிகிறது.
சாலை விபத்தில் உயிரழந்த விஸ்வா தீனதயாளன் குடும்பத்தாருக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சாதனைகள் புரிந்து வந்த விசுவா விரைவில் நம்மை விட்டு பிரிந்தது வேதனை அளிப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் குறிப்பில் பதிவிட்டுள்ளார்.
அதோடு மட்டுமில்லாமல் விஸ்வாவின் குடும்பத்தாருக்கு ரூபாய் 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.