பாகுபலி திரைப்படத்தில் வில்லனாக நடித்த ராணா டகுபதி ஒரே படத்தின் மூலம் தமிழ், மலையாள, கன்னட, இந்தி ரசிகர்கள் என அனைவர் மத்தியிலும் பிரபலமாகிப் போனார். இவர் ஏற்கனவே அஜித்தின் ஆரம்பம் படத்தில் நடித்திருந்தாலும், இவருக்கு முகம் கொடுத்தது பாகுபலிதான்.
இவர் குறித்த திருமண விஷயங்கள் அவ்வப்போது செய்திகளாக வந்தவண்ணமே உள்ளது. அவற்றிற்கு முற்றுப்புள்ளிவைக்கும் வகையில் சமீபத்தில் நடிகர் ராணா 10 நாட்களுக்கு முன்னர் தன்னுடைய காதலி மிஹீகா பஜா குறித்து ட்விட்டரில் அறிவித்தார்.
மிஹீகா, டியூ டிராப் டிசைன் ஸ்டுடியோவின் நிறுவனர் என்று குறிப்பிட்டதோடு, இவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தார்.
இந்தநிலையில் ராணாவும்- மிஹீகா பஜா நிச்சயதார்த்த கெட்டப்பில் இருப்பதுபோன்ற புகைப்படங்கள் வெளியாகி, ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தன.
தற்போது இவர் இது நிச்சயதார்த்தம் கிடையாது என்றும், நிச்சயதார்த்தத்திற்கான தேதி குறிக்கும் நாள் என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் இன்ஸ்டாகிராமில் தனது நண்பர் ஒருவருடன் உரையாடியபோது, “தனது திருமணத்திற்கு முன்னாள் காதலிகள் வாழ்த்து தெரிவித்து எஸ்.எம்.எஸ் அனுப்பி இருந்தார்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.