அப்பா உங்களை மிஸ் பண்றோம்… அதர்வாவின் உருக்கமான பதிவு!!

அதர்வா முரளி தமிழ் சினிமாவில் 90 களில் கொடிகட்டிப் பறந்த நடிகர் முரளியின் மகன் ஆவார். 2010 ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி என்ற படத்தில் அறிமுகமானார். முதல் படமான பாணா காத்தாடி,…

அதர்வா முரளி தமிழ் சினிமாவில் 90 களில் கொடிகட்டிப் பறந்த நடிகர் முரளியின் மகன் ஆவார். 2010 ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி என்ற படத்தில் அறிமுகமானார்.

முதல் படமான பாணா காத்தாடி, பெரிய அளவில் ஹிட் கொடுக்க, இவருக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் கிடைத்தன. கலை வாரிசு என்பதையும் தாண்டி தன்னுடைய முயற்சியாலேயே தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார்.

5e9018384ff8aa9ca34d0dda8d161186

அடுத்து இவர் முப்பொழுது உன் கற்பனைகள், பரதேசி, இரும்பு குதிரை, சண்டி வீரன்,  பூமராங், ஈட்டி, கணிதன், ஜெமினி கணேஷனும் சுருளி ராஜனும், செம போத ஆகாதே, இமைக்கா நொடிகள், பூமராங்க், 100 போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தற்போது அவர் குருதி ஆட்டம், தள்ளிப் போகாதே, ஒத்தைக்கு ஒத்தை, ருக்குமணி வண்டி வருது போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

4002ca4e5bbb48bfcd4cc32cae33a900

இன்று நடிகரும், அதர்வாவின் தந்தையுமான முரளிக்கு பிறந்தநாள் என்பதால் அவர் தந்தையுடன் இருக்கும் சிறு வயது புகைப்படத்தினைப் பதிவிட்டு, “அப்பா நான் பார்த்ததில் மிக பணிவான மற்றும் வலிமையான நபர் நீங்கள்தான். பிறந்தநாள் வாழ்த்துக்கள். நாங்கள் ஒவ்வொருநாளும் உங்களை மிஸ் பண்றோம்” என்று பதிவிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன