உடற்பயிற்சிகள் செய்துவரும் நடிகை ரோஜா… வைரலாகும் வீடியோ!!

நடிகை ரோஜா  90 ஸ் கிட்ஸ்களின் மனம் கவர்ந்த ஹீரோயினாக இருந்தவர். இவர் அதிக அளவில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களிலயே நடித்திருப்பார். இவர் 1992 ஆம் ஆண்டு செம்பருத்தி படத்தின்மூலம் அறிமுகமானார். இவர் கார்த்திக், பிரபு,…

நடிகை ரோஜா  90 ஸ் கிட்ஸ்களின் மனம் கவர்ந்த ஹீரோயினாக இருந்தவர். இவர் அதிக அளவில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களிலயே நடித்திருப்பார். இவர் 1992 ஆம் ஆண்டு செம்பருத்தி படத்தின்மூலம் அறிமுகமானார்.

இவர் கார்த்திக், பிரபு, அஜித் என அனைவருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். 25 வருடங்களைத் தாண்டி நடித்த இவர் தமிழில் மட்டும் 70 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2002 ஆம் ஆண்டு இயக்குனர் ஆர்.கே.செல்வமணியைத் திருமணம் செய்து கொண்டார்.

3240311969afd3087fc40807d30b4469

இவர்களுக்கு ஒருமகளும், மகனும் உள்ளனர். திருமணத்திற்குப் பின் சினிமாவில் இருந்து விலகிய அவர் சின்னத்திரையில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

அடுத்து அவருக்கு அம்மா, அக்கா கதாபாத்திரங்கள் சினிமாவில் கிடைக்க, அதையும் சிறப்பாக செய்து பெரிய அளவில் பெயர் பெற்றார். அசினுக்கு அம்மாவாக காவலன் படத்தில் நடித்து இருப்பார்.

நடிகை ரோஜா ஊறுகாய் போடுவது, தனது தொகுதியில் கிருமி நாசினி தெளித்து தூய்மை படுத்துவது, கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிடுவது என இருந்துவருகிறார்.

அந்தவகையில் தற்போது வீட்டில் உடற்பயிற்சிகள் செய்து உடல் எடையினைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த வீடியோவானது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகின்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன