உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பொருளாதார ரீதியில் பிரச்சினைகள் தலை தூக்க ஆரம்பித்து விட்டது. ஏற்கனவே உள்ளூர் தீவிரவாதம் உள்ளிட்ட பல பிரச்சினைகளால் தவித்த பாகிஸ்தான் இந்த பிரச்சினையால் மேலும் தவிக்க ஆரம்பித்து விட்டது.
எல்லா நாடுகளையும் போல பாகிஸ்தானிலும் முழு லாக் டவுன் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நிலையில் கொரோனா பாதிப்புகள் 1500 பேருக்கு புதிதாக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. 38 ஆயிரம் பேர் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பேட்டியளித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் போலவே ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். கொரோனாவோடு வாழ நாம் பழகிக்கொள்ள வேண்டியதுதான். இனிமேல் லாக் டவுன் பலனளிக்காது. 2.50 கோடி மக்கள் பாகிஸ்தானில் தினக்கூலிகளாக உள்ளனர். தொடர்ந்த லாக் டவுன் பலன் தராது. தனி மனித இடைவெளியுடன் மக்கள் வாழ பழகிக்கொள்ள வேண்டியதுதான் என இம்ரான்கான் கூறியுள்ளார்.