தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர் பிரியா பவானி சங்கர். தற்போதும் இவர் குருதி ஆட்டம்’, ‘களத்தில் சந்திப்போம்’, ‘பொம்மை’, ‘இந்தியன் 2’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
இவர் ராஜ் என்பவரை காதலித்து வருகிறார். இந்த நிலையில் சித்ரா பவுர்ணமியன்று இவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவினால் இவர் காதலரை விட்டு பிரிந்து விட்டாரோ என தவறுதலாக நினைக்கப்பட்டு விட்டது.
ரெண்டு சித்ரா பௌர்ணமிக்கு இடையே வாழ்க்கை மட்டுமல்ல உலகமே மாறிடுச்சு.நான் மட்டும் இல்ல, உலகமே தனிமையில். ஏனோ கிடைத்த கைகளைப் பற்றிக்கொண்டு கிடைத்த தோளில் ஒட்டிக்கொண்டு அவசரமாக அடுத்த வாழ்க்கைக்குத் தயாராக இந்தத் தனிமை தூண்டவில்லை. தனிமையில் நிற்க நமக்கு ஏன் இவ்வளவு பயம்? பதற்றம்? கேட்டதைத் தராமல் நல்லதைத் தந்த கடவுள் மேலயும் சித்ரா பௌர்ணமி மேலயும் கோவம் குறைஞ்சு தனிமையின் வெளிச்சத்தில் நிதானமாக தெளிவாக, எந்த எதிர்ப்பும் இன்றி, கிடைத்ததே என்று எந்தப் பிடிப்புமின்றி நான். கிரிவலம் போகாமல், முன் எப்பொழுதையும் விட அமைதியாக தனிமையின் கம்பீரத்தோடு என் வீட்டு மாடியில் சித்ரா பௌர்ணமி.
இது போல பவானி சங்கர் வெளியிட்ட பதிவினால் பல கட்டுக்கதைகள் கிளம்பி விட்டனவாம்.
பவானி சங்கர் காதலரை பிரிந்து விட்டார் என, அவர் யதார்த்தமாக சோகமாக எழுதிய விசயத்தை வைத்து அவர் காதலரை பிரிந்து விட்டதாக பல முடிச்சுகள் போட்டு டுவிட்டரில் எழுத ஆரம்பித்து விட்டனராம்.
இதை பிரியா பவானி சங்கர் தரப்பு மறுத்துள்ளது.