பெற்றோர்கள் ஓகே சொல்லலைன்னா ப்ரேக் அப் தான்… டாப்ஸி ஓப்பன் டாக்!!

டாப்சி சும்மாண்டி நாதம் என்னும் தெலுங்குத் திரைப்படத்தின்மூலம் சினிமாவில் கால் பதித்தார். அதன்பின்னர் 2 வது படமாக தமிழ் சினிமாவில் ஆடுகளம் என்னும் படத்தின்மூலம் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் எனத் தென்னிந்திய நடிகையாக…

டாப்சி சும்மாண்டி நாதம் என்னும் தெலுங்குத் திரைப்படத்தின்மூலம் சினிமாவில் கால் பதித்தார். அதன்பின்னர் 2 வது படமாக தமிழ் சினிமாவில் ஆடுகளம் என்னும் படத்தின்மூலம் அறிமுகமானார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் எனத் தென்னிந்திய நடிகையாக வலம் வந்த இவருக்கு இந்தி சினிமாவிலும் தொடர் வாய்ப்புகள் கிடைத்தன. தற்போது பாலிவுட்டிலும் அவர் தொடர் வாய்ப்புகளைப் பெற்று ஒரு முன்னணிக் கதாநாயகியாக வலம் வருகிறார்.

6b334c237d1664a59ccedb63e6011f0b

32 வயதாகும் டாப்சிக்கு எப்போது திருமணம் என ரசிகர்கள் தொடர்ந்து கேட்ட வண்ணம் இருந்து வருகின்றனர், இவர் குறித்த திருமண வதந்திகளுக்கும் பஞ்சமில்லாமல் இருந்து வருகின்றது. அதிலும் அண்மைக்காலமாக பேட்மிண்டன் விளையாட்டு வீரர் மத்யாசுவும் இவரும் காதலிப்பதாக வதந்திகள் கிளம்பிய வண்ணமே உள்ளன.

ஆனால் இவரோ யார் என்ன கேட்டாலும் தொடர்ந்து வாய் திறக்காமலே இருந்து வந்தார். தற்போது இந்தநிலையில் டாப்சியின் காதல் குறித்த தகவல்கள் உறுதியாகி உள்ளன. மேலும் அவரும் பெற்றோர் சம்மதத்திற்கு காத்திருப்பதாய் கூறியுள்ளார்.

அதாவது, “நான், பேட்மிண்டன் வீரர் மத்யாசுவினை காதலித்து வருவது உண்மை என்பதை உறுதிப்படுத்துகிறேன். ஆனால் என் குடும்பத்தினரின் சம்மதம் எனக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். அவர்கள் சம்மதிக்காவிடில் நாங்கள் நிச்சயம் பிரிந்து விடுவோம். இந்த முடிவு நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவாகும்” என்று கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன