த்ரில்லர் கதையில் தயாராகவுள்ள ஐஸ்வர்யா ராஜேஷின் திட்டம் இரண்டு!!

ஐஸ்வர்யா ராஜேஷ்  தமிழ், தெலுங்கு மலையாள போன்ற தென்னிந்திய மொழிகளில் முன்னணிக் கதாநாயகியாக வலம் வருகிறார். இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு என்ற  நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தனது பணியைத் துவக்கினார். அதன்பின்னர் கலைஞர்…

ஐஸ்வர்யா ராஜேஷ்  தமிழ், தெலுங்கு மலையாள போன்ற தென்னிந்திய மொழிகளில் முன்னணிக் கதாநாயகியாக வலம் வருகிறார். இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு என்ற  நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தனது பணியைத் துவக்கினார்.

அதன்பின்னர் கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட  நிகழ்ச்சியில் பங்குபெற்ற இவர் நீதானா அவன்  என்னும் படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார்.

இவர் அட்டகத்தி,  ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை போன்ற படங்களில் இரண்டாவது கதாநாயகியாகவே நடித்து இருப்பார். தன்னுடைய 22 வயதிலேயே காக்கா முட்டை படத்தில் 2 குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து, சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார்.

c066cdc9fbaa95f164f4899f23ffec65

கனா மற்றும் நம்ம வீட்டுப் பிள்ளை இவருக்கு ஹிட் படங்களாக அமைய, தற்போது ஒரு டஜன் படங்களை கையில் வைத்துள்ளார். அந்தவகையில் தற்போது சிக்ஸர் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன், மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பாக வினோத் குமார் ஆகிய இருவரின் தயாரிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் திட்டம் இரண்டு என்ற படத்தில் ஐஸ்வர்யா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கோகுல் பினாய் ஒளிப்பதிவையும், சதீஷ் ரகுநாதன் இசையமைக்கவும் செய்கிறார்.

கொரோனா ஊரடங்கு முடிந்த பின்னர் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் துவங்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்தப் படமானது திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என்பது அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே தெரிகிறது. கனா படம் போல் நிச்சயம் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு மாஸ் ஹிட் படமாக அமையும் என்று தெரிகின்றது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன