பேபி சாராவா இது? ரசிகர்கள் ஷாக்!!

சாரா அர்ஜுன்  திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்துள்ள ஒரு இந்திய குழந்தை நட்சத்திரம் ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டு 404 என்னும் இந்தித் திரைப்படத்தின்மூலம் அறிமுகமானார். அதன்பின்னர் 2 வது படமாக விக்ரம்,…

சாரா அர்ஜுன்  திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்துள்ள ஒரு இந்திய குழந்தை நட்சத்திரம் ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டு 404 என்னும் இந்தித் திரைப்படத்தின்மூலம் அறிமுகமானார்.

அதன்பின்னர் 2 வது படமாக விக்ரம், அனுஷ்கா, அமலா பால், சந்தானம் நடிப்பில் இயக்குனர் விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினார்.

8c0bb5864fd29f29c3fdb65958689d74

இந்த திரைப்படத்தில் விக்ரமின் மகளாக சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருப்பார். சிறு குழந்தையாக இருந்தாலும் எமோஷனல் சீன்களில் இவரது நடிப்பு 100 மார்க் போடும் அளவு இருக்கும். இதன்மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காமல் இடம் பிடித்துவிட்டார்.

அதன்பின்னர் ஏக் தி தாயான், டுமாரோ போன்ற இந்திப் படங்களிலும் நடித்துள்ளார். அடுத்து விஜய் இயக்கிய சைவம் படத்திலும் சாரா சிறப்பாக நடித்திருந்தார்.

சைவம் படம் வெளிவந்து 7 ஆண்டுகள் ஆன நிலையில் பேபி சாரா தற்போதைய புகைப்படங்களை வெளியிட, ரசிகர்களோ நம்ம பேபி சாராவா இது? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆமாங்க பேபி சாரா இன்னும் கொஞ்சம் நாள்ல நடிகையா ஆனாலும் ஆச்சரியமில்லை என்பதுபோல் வளர்ந்துவிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன