களரிப் பயிற்சி பயின்றுவரும் அதிதி ராவ்… இதோ வீடியோ!!

அதிதி ராவ் ஹைதாரி இந்திய நடிகையாகவும், பாடகியாகவும் இருந்து வருகிறார். இவர் இவர் இந்தி, மலையாளம், தமிழ், மராத்தில், தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார். இவர் 2006 ஆம் ஆண்டு பிரஜாபதி என்னும் மலையாளப் படத்தின்மூலம்…

அதிதி ராவ் ஹைதாரி இந்திய நடிகையாகவும், பாடகியாகவும் இருந்து வருகிறார். இவர் இவர் இந்தி, மலையாளம், தமிழ், மராத்தில், தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார். இவர் 2006 ஆம் ஆண்டு பிரஜாபதி என்னும் மலையாளப் படத்தின்மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அதன்பின்னர் சிருங்கரம் என்னும் தமிழ்ப் படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார். அதன்பின்னர் இந்திப் படங்களில் கால் பதித்த இவர், அங்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கப்பெற அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

6ce76f3a5f4e58ca28d1c76a028371a0

மீண்டும் மணிரத்னத்தின் காற்றுவெளியிடை படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத்தொடர்ந்து செக்கச்சிவந்த வானம் படமும், சைக்கோ படமும் இவருக்கு சிறப்பான வரவேற்பினைக் கொடுத்தன.

தற்போது இவர் துக்ளக் தர்பார், ஹே சினாமிகா, பொன்னியின் செல்வன் படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்.

தற்போது, கொரோனாவால் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில் வீட்டில் இருந்துவரும் இவர், அவ்வப்போது உடற்பயிற்சி செய்தல், பியூட்டி டிப்ஸ், சமையல் டிப்ஸ் என பல வீடியோக்களைப் போட்டு அசத்திவருகிறார்.

மேலும் இந்த நேரத்தை வீணாக்காமல் வீட்டிலேயே களறிப் பயிற்சி செய்யும் வீடியோவினை வெளியிட்டுள்ளார். அது அவரது ரசிகர் மத்தியில் வைரலாகி வருகின்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன