சித்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்துவரும் நடிகையாவார். இவர் 1986 ஆம் ஆண்டு காவேரி என்னும் மலையாளப் படத்தின்மூலம் நடிகையாக அறிமுகமாகினார்.
மலையாளத்தில் கொடிகட்டிப் பிறந்த இவருக்கு 1989 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழில் முதல் படமே ஹிட் ஆக, இவருக்கு வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்தன.
90களில் கொடிகட்டிப் பிறந்த இவர், 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஹீரோயினாக மட்டுமின்றி தங்கை, அக்கா, அண்ணி கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடித்துள்ளார். இவருக்கு தற்போது 47 வயதாகும் நிலையில் இவர் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை எனப்பலரும் கேட்டு வருவதையடுத்து அவர் பதில் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, “என் தந்தை இழப்பிற்குப் பின்னர் நான் வாழ்க்கையில் மன அழுத்தத்திற்கு ஆளானேன். அதில் இருந்து என்னால் அவ்வளவு எளிதில் மீண்டுவர முடியவில்லை.
திருமணம் வேண்டாம் என்று முடிவு எடுத்த நான், அதுகுறித்து பெரிதாக யோசித்ததில்லை. சினிமா, சீரியல் என வாழ்க்கையினைக் கழித்து வருகிறேன். இனிமேலும் எனக்கு திருமணம் குறித்த என்ணம் ஏதும் இல்லை” என்று கூறியுள்ளார்.