கொரோனா அச்சுறுத்தலால் உலகம் முழுவதிலும் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையானது பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமா படப்பிடிப்புகள், விளையாட்டுப் போட்டிகள், தொழில்கள் என எதுவும் நடைபெறவில்லை.
அதேபோல் இந்தியா முழுவதும் ஊரடங்கானது மார்ச் 24 ஆம் தேதி முதல் அமலில் உள்ள நிலையில் ஏழை, எளிய மக்கள் உணவிற்கும் கஷ்டப்படும் நிலைக்கு ஆளாகி உள்ளனர். இந்திய அரசாங்கமும், தமிழக அரசாங்கமும் உதவிகளை வழங்கியபோதிலும் சினிமாத் துறையில் உள்ள நடிகர், நடிகைகள் நன் கொடையினை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் விஜய் ரூ.1.30 கோடி வழங்கியுள்ளார். அது மட்டுமின்றி அவரது ரசிகர் மன்றத்தில் உள்ளோர் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.5000 வழங்கினார். மேலும் ரசிகர் மன்றத்தின் மூலம் பொதுமக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போதைய சூழ்நிலையில் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் வேலை இல்லாததால் உணவின்றி கஷ்டப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவி செய்ய முடிவு எடுத்த காஞ்சிபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்க இளைஞரணி செருப்பு தைக்கும் தொழிலாளர்களுக்கு, ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கியுள்ளது.
இதுகுறித்த புகைப்படங்களை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி உள்ளனர்.