என் பெயரில் நிறைய போலியான ட்விட்டர் கணக்குகள்… நிவேதா பெத்துராஜின் வீடியோ!!

நிவேதா பெத்துராஜ்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் அவரது நடிப்பு…

நிவேதா பெத்துராஜ்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

அந்தப் படத்தில் அவரது நடிப்பு பெரிய அளவில் பாராட்டப்பட்டதுடன், தமிழில் தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். என் மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’ போன்ற படங்களில் நடித்ததன்மூலம் தமிழ் சினிமாவில் புகழ்பெற்றார்.

bb72d465388111fdcce1229218bebf51

இதனைத் தொடர்ந்து இவருக்கு மென்டல் மடிலோ என்னும் தெலுங்குப் படத்தில் நடிக்க வாய்ப்பினைப் பெற்றார். தெலுங்கிலும் அறிமுகப் படம் ஹிட் ஆக, தெலுங்கு உலகிலும் கொண்டாடப்படும் நடிகையாக இருந்து வருகிறார்.

தற்போது அவ பார்ட்டி, திமிரு புடிச்சவன் படங்களில் நடித்து வருகிறார். ஊரடங்கினால் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் இவர், தனது பெயரில் போலி கணக்குகள் உள்ளது குறித்து ஒரு வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது நிவேதா பெத்துராஜ் அந்த வீடியோவில், “என்னுடைய ட்விட்டர் அக்கௌண்ட் ஆனது @nivetha_tweets மட்டுமேதான் ஆகும். ஆனால் என் பெயரில் நிறைய போலியான ட்விட்டர் கணக்குகள் உள்ளன. நான் இதுகுறித்து ட்விட்டர் நிறுவனத்திடம் புகார் கூறியுள்ளேன்.

விரைவில் போலிக் கணக்குகள் நீக்கபட்டுவிடும், இந்தக் கணக்கானது அதிகாரபூர்வமானதாக மாறவும் நாட்கள் ஆகும். இதுவே அதிகாரப்பூர்வ கணக்கு என்பதால், இந்தக் கணக்கை மட்டும்  பின்தொடருங்கள்” என்று கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன