டிசம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளையும் பாதித்துள்ளது. இந்தியாவையும் விட்டுவைக்காத கொரோனா தற்போது தாண்டவமாடத் துவங்கியுள்ளது.
இதனால் இந்தியா முழுவதும் ஊரடங்கானது மார்ச் 24 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 14 ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் மே 3 ஆம் தேதி வரையும், மூன்றாம் கட்டமாக மே 4 ஆம் தேதியில் இருந்து மே 18 வரையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் சினிமாப் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாததால், சினிமாப் படப்பிடிப்புகள் உட்பட மிக முக்கிய தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சினிமாத் தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை ஈடுகட்ட நடிகர், நடிகைகள் சம்பளத்தை 50 % குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து வருகின்றனர்.
50 சதவீதம் குறைக்க வேண்டும் என்று கேரள சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் குமார் கூறியதை அடுத்து, தற்போது தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவும் தெலுங்கு நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, “ஊரடங்கினால் பெரிய அளவில் நஷ்டத்தினை நாங்கள் சந்தித்துள்ளோம், நிச்சயம் இதனை ஈடுகட்ட பல ஆண்டுகள் ஆகலாம், இப்போதைக்கு இதற்கான ஒரே தீர்வு தெலுங்கு சினிமாவில் உள்ள நடிகர்களின் சம்பளத்தை குறைப்பதுதான்” என்று கூறியுள்ளார்.