பிரியங்கா சோப்ரா இந்தியத் திரைப்பட நடிகையாவார், இவர் 2000 ஆம் ஆண்டு உலக அழகிப் பட்டத்தை வென்றவர் ஆவார். இவர் படித்து முடித்த பின்னர் மாடலிங்க் துறையில் பணியாற்றி வந்தமையால், இவர் நடிப்பில் ஒருபுறம் பிசியாக இருந்தாலும், மற்றொரு புறம் மாடலிங்க் நிகழ்ச்சிகளில் அவ்வப்போது பங்கேற்று வருகிறார்.
பாலிவுட்டில் தற்போது பிரபலமாக இருந்துவரும் பிரியங்கா தமிழில் தமிழன் என்ற திரைப்படத்தின்மூலமே சினிமாவில் கால் பதித்தார். அது பெரிய அளவில் ஹிட் ஆக, அடுத்து, தி ஹீரோ: லவ் ஸ்டோரி ஆஃப் எ ஸ்பை என்ற படத்தின்மூலம் பாலிவுட் சினிமாவில் கால் ஊன்றினார்.
இரண்டாவது படமான ஆண்டாஸ் மாஸ் ஹிட் ஆக, இவருக்கு பாலிவுட்டில் பட வாய்ப்புகள் பெற்றார், தற்போது ஹாலிவுட் பக்கம் கரை ஒதுங்கியுள்ள இவர் பாலிவுட்டிலும் தலை காட்டி வருகிறார்.
அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை காதலித்து பல சர்ச்சைகளுக்கு இடையே திருமணம் செய்துகொண்டு, தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
பிரியங்கா சோப்ரா, மெட் காலா நிகழ்ச்சியில் ஒவ்வொரு ஆண்டும் பங்கேற்று வருகிறார், இவரது வித்தியாசமான கெட் அப்புகளுக்கு பரிசுகளும், பாராட்டுக்களும் கடந்த 2 ஆண்டுகளாகக் குவிந்தன.
இந்த ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக மெட் காலா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், வீட்டிலேயே தனது நெருங்கிய நண்பரின் குழந்தையான ஸ்கை கிருஷ்ணா என்ற சிறுமி பிரியங்காவிற்கு மேக்கப் போட்டு விட்டு, வின்னர் மகுடத்தையும் சூட்டியுள்ளார்.
அந்தப் புகைப்படங்களை பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.