திரெளபதி என்ற படம் மூலம் ஓவர் நைட்டில் பாப்புலரானவர் இயக்குனர் மோகன் ஜீ. இவரது படத்தை சிலர் எதிர்த்தனர் பலர் ஆதரித்தனர்.

ஜாதிரீதியாக உண்மையிலேயே தவறாக கடைபிடிக்கப்படும் பாகுபாடுகளை இவர் தன் படத்தில் வைத்திருந்தார்.
இந்த படம் வந்ததில் யாராவது ஒருவர் இவரிடம் சமூக வலைதளங்களில் வம்பு இழுத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். அதற்கு இவரும் பதில் கொடுத்து கொண்டுதான் இருக்கிறார்.
சமீபத்தில் ஒருவர் இரண்டு படம் எடுத்துட்டு இது பண்ற அலப்பறைய பாரு என கூறி இருக்கிறார் அதற்கு பதிலளித்த மோகன் ஜீ,
படம் எடுத்தா பேச கூடாதாடா.. எடுக்குறதுக்கு முன்னாடியும் இப்படிதான்டா பேசுனேன்.. வன்னியர் ஒருத்தன் வளர்ந்தா உங்களுக்கு எரிய தான்டா செய்யும்.. இன்னும் பலர் திரைத்துறையில் வளர தான்டா போறாங்க.. வயிறு எரிந்து கதறுங்கடா..என கூறி இருக்கிறார்.