குழந்தை கொலுசை கூட அடகு வைக்கணும்- டாஸ்மாக் குறித்து அமீர் வேதனை

இன்று தமிழ்நடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை கன ஜோராக நடந்து வருகிறது. பல இடங்களில் 5கிமீக்கு மேலும் மிகப்பெரிய க்யூ நின்று பொறுமையாக மதுபானங்களை வாங்கி செல்கின்றனர். மதுரையில் செல்லூரில் பெண்கள்…

இன்று தமிழ்நடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை கன ஜோராக நடந்து வருகிறது. பல இடங்களில் 5கிமீக்கு மேலும் மிகப்பெரிய க்யூ நின்று பொறுமையாக மதுபானங்களை வாங்கி செல்கின்றனர்.

e8f0d21cdd02abc6f55f825632f2c66a

மதுரையில் செல்லூரில் பெண்கள் எதிர்ப்பால் ஒரு கடை மூடப்பட்டது. பெண்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இயக்குனர் அமீரும் தனது கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

இப்போ பீடா கடைய திறப்பதற்கும் சாராயக்கடையை திறப்பதற்க்கும் என்ன அவசியம் ஏற்பட்டது என தெரியவில்லை. மக்கள் உங்களிடம் கோரிக்கை வைத்தார்களா? யாரை திருப்திபடுத்துவதற்காக இதை செய்கிறீர்கள். யாரை ஏமாற்றுவதற்காக யாரை மகிழ்விப்பதற்காக இதை எல்லாம் செய்றிங்க.

உண்மையிலேயே அதிகாரிகளிடம் ஆலோசனை செய்துதான் இதை எல்லாம் செய்றிங்களான்னு ஆச்சரியமா இருக்கு. எதிர்க்கட்சிகள் கூட்டம் போட சொன்னதற்கு அவர்கள் என்ன மருத்துவர்களா?அவர்களிடம் ஆலோசனை செய்வதற்கு என முதல்வர் கூறினார். இது எந்த மருத்துவரிடம் ஆலோசனை செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

இது தொடர்ந்தால் குழந்தையின் கொலுசை கூட விட மாட்டார்கள் அதை கூட எடுத்து சென்று குடித்து விடுவார்கள் என கவலை பட தெரிவித்துள்ளார்.

நீங்க எல்லாம் மக்கள் முதல்வர் தானா? #Director #Ameer


محمد ياسر‎ ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಗುರುವಾರ, ಮೇ 7, 2020

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன