ஒருநாளைக்கு 75 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் நடிகை பிரணீதா!!

நடிகை பிரணீதா சுபாஷ்  தமிழ், தெலுங்கு, கன்னட போன்ற தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து ஒரு தென்னிந்திய நடிகையாக வலம் வருகிறார். இவர் 2010 ஆம் ஆண்டு போர்கி என்னும் கன்னடப் படத்தின்மூலம் ஹீரோயினாக…

நடிகை பிரணீதா சுபாஷ்  தமிழ், தெலுங்கு, கன்னட போன்ற தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து ஒரு தென்னிந்திய நடிகையாக வலம் வருகிறார். இவர் 2010 ஆம் ஆண்டு போர்கி என்னும் கன்னடப் படத்தின்மூலம் ஹீரோயினாக தனது சினிமாப் பயணத்தினைத் துவங்கினார்.

அதன்பின்னர் தெலுங்கு சினிமாவில் அதே ஆண்டு எம் பில்லோ எம் பில்லடோ என்ற படத்தின்மூலம் கால் பதித்தார். அதன்பின்னர் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து படவாய்ப்புகளைப் பெற்றுவந்த இவருக்கு, 2011 ஆம் ஆண்டு உதயன் படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார்.

9128da71fe881ad165b38d6509302678

தமிழில் இவர் சகுனி, மாஸ், எனக்கு வாய்த்த அடிமைகள் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதுவரை 25 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துள்ள இவர், தற்போது ஊரடங்கால் தவித்துவரும் மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.

அதாவது ஊரடங்கினால் உணவிற்கு வழியின்றித் தவிக்கும் மக்களுக்கு உதவும் வகையில் ஒரு நாளைக்கு 75 ஆயிரம் பேருக்கு உணவு வழங்குகிறார். மேலும் உணவு சமைப்பது முதல் வழங்குவது வரை அனைத்துப் பணிகளையும் மேற்பார்வையிட்டு வருகிறார்.

e729375c9cc5b2c0fc66e1802829c668

முன்னணி நடிகைகள் பலரும் பொருளதவி செய்யத் தயங்கும் நிலையில், வளர்ந்துவரும் நடிகையான பிரணீதா சுபாஷின் இந்த உதவிக்கு வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன