#Breaking வன்னியர்களுக்கான 10.5 உள் ஒதுக்கீடு ரத்து செல்லும் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

வன்னியர்களுக்கான 10.5 உள் ஒதுக்கீட்டை ரத்து செய்த உயர் நீதிமன்ற தீர்ப்பு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது. வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5…

supreme court

வன்னியர்களுக்கான 10.5 உள் ஒதுக்கீட்டை ரத்து செய்த உயர் நீதிமன்ற தீர்ப்பு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 உள் ஒதுக்கீட்டை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மற்றும் பாமக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது செல்லும் என தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் உள் ஒதுகீடு வழங்க சரியான காரணங்களை அரசு தெரிவிக்க வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்துள்ளது.

இதனால் வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் வழங்கப்பட்ட 10.5 உள் ஒதுக்கீடு அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன