வைரலாகி வரும் நயன்தாரா- விக்னேஷ் சிவன் வீடியோ!!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா.  தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக கால் பதித்தார், 2005 ஆம் ஆண்டு சினிமாவில் கால் பதித்த இவர்,…

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா.  தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக கால் பதித்தார், 2005 ஆம் ஆண்டு சினிமாவில் கால் பதித்த இவர், 15 ஆண்டுகளாக சினிமாத் துறையில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்

இதுவரை தமிழில் 42 படங்களில் நடித்துள்ள இவர், 2010 ஆம் ஆண்டு பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்திற்குப் பின்னர் எந்தத் திரைப்படங்களிலும் நடிக்காமல் சினிமாவில் இருந்து விலகினார்.

அதன்பின்னர் 3 ஆண்டுகள் கழித்து ராஜா ராணி திரைப்படத்தின்மூலம் கம்பேக் கொடுத்தார், கம்பேக் வேறு லெவலாக அமைய, இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்னும் இடத்தினைப் பிடித்துள்ளார்.

aa35ee01288245b370898bbaf69ef844

அதன்பின்னர் இவர் நானும் ரௌடி தான் படத்தில் நடித்ததன்மூலம் விக்னேஷ் சிவனுடன் காதல் கொண்டார். இவர்கள் இருவரும் தங்கள் குறித்து கடந்த ஆண்டு வெளிப்படையாகவே உறுதிப்படுத்தினர். இவர்களின் திருமணம் கடந்த ஆண்டே நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது வரை நடக்கப் பெறவில்லை.

சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வெறுப்பேற்றிவரும் இந்த ஜோடி குறித்த ஒரு வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றினைப் பதிவிட்டு, நானும் ரௌடி தான் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாராவிற்கு சீன் மற்றும் டையலாக் சொல்லி தரும் போது எடுத்த வீடியோ இது என்றும், இவை உண்மையில் மறக்கமுடியாத நினைவுகள் என்றும் பதிவிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன