நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தாலும் துவக்கத்தில் தெலுங்கு சினிமாவின் மூலமே பிரபலமானார்.
இவர் 2007 ஆம் ஆண்டு மாஸ்கோவின் காவிரி என்னும் தமிழ்த் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்தார். ஆனால் இது எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. அதனைத் தொடர்ந்து அவர் தெலுங்கில் ஏ மாயா சேசவா திரைப்படத்தில் நடிக்க அது மாஸ் ஹிட்டானது.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் வந்திருந்தாலும் அழகால் தமிழ் இளைஞர்களின் மனதில் பதிந்துவிட்டார். அடுத்து பாணா காத்தாடி படம் இவருக்கு ஓரளவு வரவேற்பினைக் கொடுத்தது, அதன்பின்னர் தெலுங்கு சினிமாவிலேயே கொடி கட்டிப் பறந்த இவர் நான் ஈ படத்தின்மூலம் தமிழில் மிகவும் பிரபலமானார்.
முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு நாக சைதன்யாவை பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில் நடிகை சமந்தா தன்னுடைய 33 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். மேலும் தனது பிறந்தநாள் குறித்த புகைப்படங்களை சமந்தா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
அதாவது கணவர் நாகசைதன்யா வீட்டிலே கேக் செய்து சமந்தாவின் பிறந்தநாளை வீட்டிலேயே எளிமையாகக் கொண்டாடியுள்ளார். சமந்தாவிற்கு தமிழ், தெலுங்கு சினிமா நடிகர்கள், ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்துகளை வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். மேலும் சமந்தாவின் இந்த புகைப்படத்தினையும் வைரலாக்கி வருகின்றனர்.