தமிழ் சினிமாவில் ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுக்கும் டான்ஸ் கொரியோகிராபராக பணியாற்றி இருப்பவர் டான்ஸ் மாஸ்டர் சாண்டி. இவர் மானாட மயிலாட டான்ஸ் ஷோவின் மூலம், நடனக் கலைஞராக அறிமுகமானார்.
ஏறக்குறைய 8 சீசனிலும் நடனக் கலைஞராக பணியாற்றிய சாண்டிக்கு சொந்தமாக நடனப் பள்ளி ஒன்றும் உள்ளது. இவர் கபாலி படத்தில் கொரியோகிராபராக அறிமுகமானாலும், காலா படத்தில் ரஜினிக்கு கொரியோகிராஃப் பண்ணுவதன் மூலமே பிரபலம் அடைந்தார்.
டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராகப் பணியாற்றிய இவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார், அங்கு மிகச் சிறந்த பொழுதுபோக்காளராக இருந்ததோடு தன்னுடைய கேலி, கிண்டலால் சில பிரச்சினைகளையும் சந்தித்தார். மேலும் தன் இரண்டாவது மனைவி சில்வியா மற்றும் மகள் லாலா குறித்துப் பேசி மிகவும் பிரபலமானார்.
இறுதியில் இரண்டாம் இடத்தைப் பிடித்ததோடு, தற்போது படங்களில் மீண்டும் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சாண்டியின் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது.
அதாவது சாண்டி லண்டன் சென்று இருந்தபோது, அங்கு இருந்த நடுரோட்டில் லுங்கி, பனியனுடன் ரஜினியின் பேட்ட பாடலுக்கு ஆட்டம் போட்ட படியே சுற்றி வந்துள்ளார்.
உடனே அங்கு போலீஸ் வாகனம் நின்று இருப்பதை பார்த்த சாண்டி, லுங்கியை கழட்டி முகத்தை மறைத்துக் கொண்டு திரும்ப ஓடி விடுகிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.