ஜோதிகா பிரச்சினை கருத்து தெரிவிக்காத விஜய் சேதுபதியின் புதிய கருத்து

ஜோதிகா தஞ்சாவூர் கோவிலையும் அரசு மருத்துவமனையையும் ஒப்பிட்டு பேசி அது சர்ச்சையாகி அதில் பல ஹிந்து அமைப்புகள், தமிழர் அமைப்புகள் தலையிட்டது அனைவருக்கும் தெரிந்த விசயம். இதில் பலரும் கருத்து சொல்லி வந்த நிலையில்…

ஜோதிகா தஞ்சாவூர் கோவிலையும் அரசு மருத்துவமனையையும் ஒப்பிட்டு பேசி அது சர்ச்சையாகி அதில் பல ஹிந்து அமைப்புகள், தமிழர் அமைப்புகள் தலையிட்டது அனைவருக்கும் தெரிந்த விசயம். இதில் பலரும் கருத்து சொல்லி வந்த நிலையில் ஜோதிகா சொன்ன கருத்தை விஜய் சேதுபதி ஆதரித்ததாக செய்திகள் வந்தன.

19c5efbddd3142a2e7792997af8f4bbc

விஜய் சேதுபதியின் டுவிட்டர் ஐட் போல ஃபேக் ஐடி தயார் செய்து ஜோதிகாவுக்கு ஆதரவாக விஜய் சேதுபதி சொன்னது போல் கருத்துக்கள் வந்தன.

இதை விஜய் சேதுபதி மறுத்திருந்தார் தனது பெயரிலான ஃபேக் ஐடி என்று சொல்லி இருந்தார், இருந்தாலும் ஜோதிகா விவகாரத்தில் அவரது கருத்து என்ன என்று சொல்லவில்லை.

இந்த நிலையில் தஞ்சாவூர் கோவில் பிரச்சினையில் தாங்கள் கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறோம் என்ற வகையில் சூர்யா நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

விவேகானந்தரும் அதைத்தான் சொல்லி இருக்கிறார், திருமூலரும் அதைத்தான் சொல்லி இருக்கிறார் என தாங்கள் செய்து வரும் சேவைக்கு நீண்ட விளக்கம் அந்த கடிதத்தில் கொடுக்கப்பட்டிருந்தது.

இதை பார்த்த விஜய் சேதுபதி ஒற்றை வரியில் சிறப்பு என அந்த கடிதத்தை பாராட்டியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன