எண்பதுகளில் பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி பல்வேறு நாத்திக கருத்துக்களை கொண்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் வேலு பிரபாகரன். கடவுள், காதல் அரங்கம், அதிசய மனிதன் உள்ளிட்ட படங்களை இவர் இயக்கியுள்ளார்.
பெரியாரிய கொள்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்ட இவர் சில நாட்களாகவே தாடி கெட் அப்புடன் காட்சியளித்தார்.
தற்போது ஒரு வீடியோவில் அசலாக பெரியார் போலவே பேசி பெரியாரின் ஒரிஜினல் கெட் அப்புக்கு அப்படியே மாறியுள்ளார்.
பல்வேறு விசயங்கள் குறித்து பேசியுள்ள அவரின் காணொலி தற்போது வைரலாகி வருகிறது.