கடந்த 2013ல் 18 வரை ஒளிபரப்பான சீரியல் தெய்வ மகள். இந்த சீரியலில் நடித்ததன் மூலம் அனைத்து மக்களிடமும் சென்று சேர்ந்தவர் வாணி போஜன்.
குடும்ப பெண்கள் அனைவரிடமும் இந்த சீரியலின் மூலம் சென்றடைந்தார். இந்த சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மிக அழகான தோற்றம் கொண்ட இவர் அவ்வப்போது சினிமாக்களில் தலை காட்டி வந்தார். இருப்பினும் சில நாட்கள் முன் வந்த ஓ மை கடவுளே என்ற படத்தில் முக்கியமான வித்தியாசமான ரோலில் இவர் நடித்திருந்தார்.
இந்த படம் ஓரளவு வெற்றியடைந்தது, வாணி போஜனுக்கும் தற்போது சினிமா வாய்ப்புகள் அதிக அளவு வர துவங்கி உள்ளது. இருந்தாலும் அவர் தற்போது வெப்சீரிஸ் ஒன்றில் அவர் நடிக்க இருக்கிறாராம்.அதை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸின் உதவியாளர் இயக்க இருக்கிறாராம்.