பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் 1988 ஆம் ஆண்டு தனது சினிமா வாழ்க்கையினைத் துவக்கினார். ஏறக்குறைய 32 ஆண்டுகள் சினிமாவில் இருந்துவந்த இவர் 2018 ஆம் ஆண்டு கேன்சர் இருப்பதாக இவரே அறிவித்தார், அதன்பின்னர் வெளிநாடு சென்று சிகிச்சை பெற்றுவந்த இவர் 2 ஆண்டுகள் அதாவது 2017-2019 கால கட்டங்களில் நடிக்கவில்லை.
தற்போது இவர் நடித்துவரும் நிலையில், நேற்று இவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட அவரை அவரது குடும்பத்தினர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இவர், சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார்.
இதுகுறித்து அறிவிப்பு வெளியானதும் ரசிகர்கள் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர், இந்தியத் திரையுலகமே இவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றது. ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் இவர் குறித்த விஷயங்களைப் பதிவிட்டதுடன், இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.
கடைசியாக இவர் சம்பக் பன்சலாக ஆங்ரேஸி மீடியம் (2020) என்ற திரைப்படத்தில் நடித்தார். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நிலையில், மும்பையில் உள்ள தனது வீட்டில் முடங்கியிருக்கும் அவரின் தாயார் இறந்தார். 2 தினங்களுக்கு முன்னர் இர்பான் கான் வீடியோ கால் மூலமாக இறுதி சடங்குகளைப் பார்த்து கதறி அழுதார். தாயார் இறந்த மூன்று நாட்களில் இவரும் இறந்துள்ளதால், இவரது குடும்பத்தினர் கடும் சோகத்தில் உள்ளனர்.