இசைஞானி இளையராஜாவின் இசை பற்றி தமிழக ரசிகர்கள் அனைவருக்குமே தெரியும். பூங்காற்று திரும்புமா, தேனே தென்பாண்டி மீனே, வளையோசை கல கல என்ற பாடல்கள் மட்டுமல்லாது 1000 படங்களில் வித்தியாசமான பல ஹிட் அடித்த பாடல்களை நமக்கு கொடுத்துள்ளார் இசைஞானி.
தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழி படங்களிலும் இளையராஜா தனது ஆதிக்கத்தை செலுத்தியுள்ளார்.
அப்படியாக அவர் இசையமைத்து மற்ற மொழிகளில் பெரும் ஹிட் அடித்த படங்களையும் பாடல்களையும் பற்றி பார்க்க வே இந்த பதிவு.
இன்றைய பதிவில் கொண்டவெட்டி தொங்கா என்று தெலுங்கிலும் அதே படம் தமிழில் தங்கமலை திருடன் என்ற பெயரில் பாடல்கள் எல்லாம் ஹிட் ஆன விசயம் பற்றி பார்க்க இருக்கிறோம்.
இளையராஜா தெலுங்கில் சிரஞ்சீவி படங்களுக்கு மட்டும் பார்த்து பார்த்து செய்தாரா என தெரியவில்லை. சிரஞ்சீவி நடித்து இளையராஜா அக்காலத்தில் இசையமைத்த படங்கள் எல்லாம் வேற லெவல் படங்கள்.
இருக்கிறவனிடம் இருந்து பறித்து இல்லாதவனுக்கு கொடுப்பது போன்ற கதைதான் இந்த கொண்டவெட்டி தொங்கா. சிரஞ்சீவிக்கு ஜோடியாக ராதா, விஜயசாந்தி நடித்திருந்தனர்.
இளையராஜாவின் இசை இப்படத்துக்கு பிரதானம், சுபலேகா என்ற பாடல், கோலோ கோலம்மா போன்ற பாடல்கள் பெரிய அளவில் ஹிட் ஆகின.
தமிழிலும் இப்பாடல்கள் தங்கமலை திருடனாக வந்து ஹிட் ஆகின. சுபவேளை நாளை இங்கு இது போல் வருமா, பொன்னே அன்பான எந்தன் கண்ணே என்ற இளையராஜாவின் இசையில் வந்த பாடல்கள் மிக இனிப்பாக இருந்தன.
கடந்த 1990ல் வெளிவந்த இந்த படத்தை இயக்குனர் கோதண்டராமரெட்டி இயக்கி இருந்தார். இளையராஜா இசையமைத்திருந்தார். கேட்காதவர்கள் இந்த படத்தின் தெலுங்கு மற்றும் தமிழ்ப்பாடல்களை டவுன்லோடி கேளுங்கள் அவ்வளவு இனிமையாக இருக்கும்.