தீரன் அதிகாரம் ஒன்று என்னும் த்ரில்லர் படத்தினைக் கொடுத்த மாஸ் இயக்குனர் வினோத், இவர் தற்போது அஜித்தின் வலிமை படத்தினை இயக்கி வருகிறார். போனிகபூர் இப்படத்தை தயாரிக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவாளராகவும், யுவன் இசையமைப்பாளராகவும் பணிபுரிகின்றனர்.
அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து மற்றுமொரு படத்தை தயாரிக்க விரும்பிய அஜித் வலிமை படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகவும், பைக் ரேஸ் சம்பந்தப்பட்டது என்ற தகவலும் வெளியான நிலையில் இப்படம் குறித்த அனைத்து விஷயங்களையும் படக் குழு ரகசியமாக வைத்துள்ளது.
அஜித் படம் என்றாலே ரசிகர்கள் மத்தில் எதிர்பார்ப்புக்கு பஞ்சம் இருக்காது. இப்படம் காக்கும் ரகசியங்களால் ரசிகர்கள் உச்சநிலை எதிர்பார்ப்பில் உள்ளனர்.
அதிலும் நாளை அஜித் தனது பிறந்தநாளைக் கொண்டாட உள்ள நிலையில், நிச்சயம் பட குறித்த ஏதாவது ஒரு விஷயத்தினை படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட வாய்ப்புண்டு.
இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் கொரோனா தாண்டவமாடும் இந்த மோசமான சூழ்நிலையில் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் எந்த படத்துக்கும் எந்த விதமான விளம்பரமும் செய்ய வேண்டாம் என்று ஒரு அறிக்கையினைத் தயார் செய்து வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பானது பொதுவாக அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் தல ரசிகர்களை கடும் சோகத்தில் தள்ளியுள்ளது.