வேகமாக தயாராகி வரும் அருண் விஜயின் 30வது படம்

ப்ரியம் படத்தில் அருண்குமார் ஆக அறிமுகமானவர் அருண் விஜய் என்ற பெயர் மாற்றத்துக்கு பிறகுதான் இவரது படங்கள் ஏறுமுகம் கண்டன. இந்த நிலையில் தற்போது மாஃபியா வரை கலக்கலாக பல படங்கள் நடித்து முடித்து…

ப்ரியம் படத்தில் அருண்குமார் ஆக அறிமுகமானவர் அருண் விஜய் என்ற பெயர் மாற்றத்துக்கு பிறகுதான் இவரது படங்கள் ஏறுமுகம் கண்டன.

3e09a79ead7f9ca11179cfbeecd57f8c

இந்த நிலையில் தற்போது மாஃபியா வரை கலக்கலாக பல படங்கள் நடித்து முடித்து விட்டார்.

அடுத்தடுத்த படங்களில் பிஸியாகவும் உள்ளார். தற்போது ஜிஎன் ஆர் குமரவேலன் இயக்கும் சினம் படத்தில் நடித்து வருகிறார்.

ஜிஎன் ஆர் குமாரவேலன் முன்னாள் திரைப்பட இயக்குனர் ஜி என் ரங்கராஜனின் புதல்வனாவார்.

இவர் நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார்.

இவர் இயக்கும் இப்டத்துக்காக சென்னையில் 45 லட்சம் செலவில் பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. அந்த செட்டில் அருண் விஜய் டூப் இல்லாமல் சண்டை போட்ட காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

விரைவில் அருண் விஜயின் 30வது படமாக இது வருகிறது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பாலக் லால்வாணி நடித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன