ஹோம் மேட் பீட்சா… குடும்பத்துடன் பீட்சா சாப்பிடும் புகைப்படத்தினை வெளியிட்ட பிரகாஷ்ராஜ்!!

நடிகர் பிரகாஷ்ராஜ் 1991 ஆம் ஆண்டு ஒரு நடிகராக கால் பதித்து ஹீரோ, வில்லன், அப்பா, அண்ணன் என அனைத்துவிதமான கதாபாத்திரங்களிலும் நடித்துவிட்டார். வில்லன் என்றால் உடல் பருமனுடனும், முகத்தினைக் கொடூர வைத்துக் கொண்டு,…

நடிகர் பிரகாஷ்ராஜ் 1991 ஆம் ஆண்டு ஒரு நடிகராக கால் பதித்து ஹீரோ, வில்லன், அப்பா, அண்ணன் என அனைத்துவிதமான கதாபாத்திரங்களிலும் நடித்துவிட்டார். வில்லன் என்றால் உடல் பருமனுடனும், முகத்தினைக் கொடூர வைத்துக் கொண்டு, வேட்டி சட்டையில் 5 அல்லது 6 அடியாட்களுடன் சுற்ற வேண்டும் என்ற போக்கினை மாற்றி வில்லனும் ஹீரோ போல் பார்க்க அழகாகவும், கோட் சூட் போடவும் செய்யலாம் என்று ஒரு பிம்பத்தினை ஏற்படுத்தியவர்  நடிகர் பிரகாஷ்ராஜ்.

இவர் சினிமாவில் 29 ஆண்டுகள் இருந்துவந்தாலும், கில்லி படம் இவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வரவேற்பினைக் கொடுத்தது. அதன்பின்னர் பெரிய அளவில் ஜொலித்துவரும் இவர், தற்போது ஊரடங்கின் மூலம் நிஜ வாழ்க்கையில் ஹீரோ ஆகிவிட்டார்.

43adecc12cc5a6ebb361e8c9bdd767db

ஊரடங்கால் ஏழை எளிய மக்கள் உணவு உட்பட பல அடிப்படைத் தேவைகளுக்கும் பணம் இல்லாமல் தவித்து வருகின்ற நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் மக்களுக்கு காய்கறி , அரிசி போன்றவற்றினை தொடர்ந்து வழங்கி வருகிறார்.

மேலும் ஊரடங்கால் தனது பண்னை வீட்டில் மனைவி, மகள் மற்றும் மகனுடன் வசித்துவரும் இவர் அவ்வப்போது தனது குடும்பத்துடன் செய்யும் விஷயங்களை புகைப்படங்களாக பதிவிட்டு வருகிறார்.

தனது பண்ணை வீட்டில் காய்கறி, பழங்கள் போன்றவற்றினை விவசாயம் செய்துவரும் அவர் தோட்டப் பராமரிப்பு குறித்த சில விஷயங்களை வீடியோவாகப் பதிவிட்டு இருந்தார்.

தற்போது அவர் மனைவியுடன் சேர்ந்து வீட்டிலேயே பீட்சா செய்து அதனை தனது மகள் மற்றும் மகளுடன் சேர்ந்து சாப்பிட்டு வருவதாகக் கூறியதுடன், “லாக்டவுன் பெஸ்ட் மொமண்ட்ஸ்” என்று கேப்ஷனாகப் பதிவிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன