ஹைய்யோ ஹைய்யோ… திரிஷா உங்களுக்கே இது ஓவரா தெரியலையா..!!

கொரோனா தொற்று இந்தியாவில் தீவிரமானதை அடுத்து மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கானது நீட்டிக்கப்பட்டுள்ளது, தற்போதும் நிலைமையின் தீவிரம் அதிகமாவதால் இந்த ஊரடங்கானது மூன்றாம் கட்டமாக நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது. ஊரடங்கால் சினிமாத்…

கொரோனா தொற்று இந்தியாவில் தீவிரமானதை அடுத்து மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கானது நீட்டிக்கப்பட்டுள்ளது, தற்போதும் நிலைமையின் தீவிரம் அதிகமாவதால் இந்த ஊரடங்கானது மூன்றாம் கட்டமாக நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.

ஊரடங்கால் சினிமாத் தொழில்கள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் நடிகர், நடிகைகள் வீட்டிலேயே ஓய்வில் இருந்து வருகின்றனர். மேலும் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு பொழுதுபோக்கி வருகின்றனர்.

b2afe1fcb3c239c891205717a9a2af0f

அந்தவகையில் நடிகை திரிஷா, கேமரா முன்னால் நடிக்காமல் இருப்பது வருத்தமாக உள்ளதாக வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து திரிஷா கூறியுள்ளதாவது, “நான் எப்போதும் வீட்டிற்குள் இதுபோல் அடைந்து இருந்தது கிடையாது. படப்பிடிப்பு, தோழிகளுடன் அவுட்டிங்க் என இருந்து வருபவள்.

சிறுவயதிலும் பள்ளி, மற்ற குழந்தைகளுடன் வெளியே சென்று விளையாடுதல் என்றே இருந்துள்ளேன். வருடம் முழுவதிலும் பிசியாக வெளியே சுற்றிவரும் நான், நீண்ட நாட்கள் வீட்டிலேயே கழித்து வருகிறேன்.

உண்மையில் இது போர் அடிக்கவே செய்கிறது. தோழிகளுடன் வீடியோ காலில் பேசினாலும், கேமரா முன்னால் நடிக்காமல் இருப்பது வருத்தமாக உள்ளது. அந்தக் குறை எப்போது தீரும் என்று தெரியவில்லை” என்று கூறியுள்ளார் திரிஷா. உங்க சின்சியாரிட்டிக்கு அளவே இல்லாம போச்சு என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன