சின்னத் திரையில் தொகுப்பாளினியாக இருந்துவரும் அர்ச்சனா மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவராக உள்ளார். அழகான, இளமையான தொகுப்பாளினிகளுக்கு இடையே தனது நகைச்சுவையாலும், வேடிக்கையான பேச்சாலும் அதிக ரசிகர்களைக் கொண்டவராக இருப்பவர் ஜீ தமிழ் தொகுப்பாளினி அர்ச்சனா.
திருமணத்திற்குப் பின்னர் பல ஆண்டுகள் கழித்து உடல் எடை கூடிய நிலையில் பல இளம் தொகுப்பாளினிகளுக்கு டஃப் கொடுக்கும் அச்சுமாவின் மகள் சாராவை அறியாதவர் யாரேனும் உண்டா? ஜீ தமிழில் ஒளிபரப்பான சூப்பர் மாம் நிகழ்ச்சியில் தனது தாயாருடன் இணைந்து கலக்கி இருப்பார் குட்டி தேவதை சாரா.
தாயினை மிஞ்சிய சாரா தற்போது சிவ கார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தில் சிவ கார்த்திகேயனின் மகளாக நடித்து வருகிறார். தற்போது ஊரடங்கால் அனைவரும் வீட்டிற்குள் உள்ளே நிலையில், சாரா தன்னுடைய யூடியூப் சேனலில் கலக்கி வருகிறார்.
வீட்டினை டெக்கரேஷன் செய்தல், டான்ஸ் ஆடுதல், பாட்டு பாடுதல் என அசத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது மாஸ்டர் இந்த படத்தில் விஜய் பாடியுள்ள குட்டி ஸ்டோரி பாடலுக்கு குத்து டான்ஸ் போட்டுள்ளார்.
அந்த வீடியோ, தற்போது பல லட்சக்கணக்கிலான பார்வைகளைக் கடந்த ஒன்றாக இருந்து வருகின்றது. சமீபத்தில் இவர் சிவகார்த்திகேயனுடன் டாக்டர் சூட்டிங்க் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.