விஜயகாந்த் 1978 ஆம் ஆண்டு அகல் விளக்கு என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
1991 ஆம் ஆண்டில் அவர் நடித்த கேப்டன் பிரபாகரன் படம் மாஸ் ஹிட்டானதைத் தொடர்ந்து இவர் கேப்டன் என்னும் புனைப்பெயரால் அழைக்கப் பெறுகிறார். அதன்பின்னர் அரசியலில் கால் பதித்த இவர் 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்து வருகிறார்.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க, இரண்டாம் கட்ட ஊரடங்கானது மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் பொதுமக்கள், சினிமாப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தேமுதிக தலைவரும், சினிமா நடிகருமான விஜயகாந்த் குறித்த ஒரு வீடியோவினை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த்தின் ட்விட்டர் அக்கௌண்ட்டில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவினைப் பார்த்த ரசிகர்கள் பலரும், விஜயகாந்தா இது? எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரு? என்று புலம்பி வருகின்றனர்.
அதாவது பிரேமலதா விஜயகாந்த் கேப்டனை உட்கார வைத்து முடி திருத்தி, ஷேவ் செய்து, டை அடித்துவிட்டு, நகத்தினை வெட்டி விட்டு, கால்களை மசாஜ் செய்யும் வீடியோவினை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் விஜயகாந்த் குழந்தைபோல் சிரிக்க, அதைப் பார்த்த ரசிகர்கள் சிங்கம்போல் இருந்தவர் இப்படி குழந்தை மாறி ஆகிட்டாரே? என்று புலம்பி வருகின்றனர்.