தமிழ் சினிமாவில் மிகவும் சாதாரண குடும்பத்தினைப் போல் ஒற்றுமையுடனும், தமிழ்க் கலாச்சாரத்துடனும் வாழும் ஒரு நட்சத்திர குடும்பம் சிவக்குமார் குடும்பமாகும். சிவக்குமார் 70 மற்றும் 80 களில் கொடி கட்டிப் பறந்த நடிகர். அவரைத் தொடர்ந்து கலைவாரிசாக சூர்யா சினிமாவில் அறிமுகமானாலும், தனது கடின உழைப்பால் மட்டுமே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
அதேபோல் அழகினைத் தாண்டிய நடிப்பினால் சினிமாவில் பெண்கள் நிலைத்து நிற்க முடியும் என்று காட்டியவர் ஜோதிகா , வெளிநாடுகளில் படித்து வளர்ந்தாலும் நம்ம பக்கத்து வீட்டுப் பையன் போல் நடிப்பில் அசத்தும் கார்த்தி என நட்சத்திர பட்டாளங்கள் சிவக்குமார் குடும்பத்தில் உள்ளனர்.
இந்த குடும்பமானது பல குடும்பங்களுக்கு முன் மாதிரியாக இருந்து வருகிறது. சூர்யா- சிவக்குமார் குடும்பம் அகரம் அறக்கட்டளை மூலம் பல ஏழை, எளிய குழந்தைகளுக்கு படிப்பு உதவி செய்து வருகின்றனர். அதேபோல் உழவன் அறக்கட்டளையினைத் துவக்கி நடிகர் கார்த்தி சேவை செய்து வருகிறார்.
அந்தவகையில் சமீபத்தில் நடைபெற்ற JFW சினிமா விருதுகள் நிகழ்ச்சியில் நடிகை ஜோதிகாவிற்கு சிம்ரன் விருது வழங்கினார். அதன்பின்னர்
பேசிய ஜோதிகா, “தஞ்சை பெரிய கோயில் கட்டுவதற்கு கோடிக் கணக்கில் செலவு செய்வது தேவையற்றது, அந்தப் பணத்தில் மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடங்கள் கட்டுங்கள், கோயில் உண்டியலில் காசு போடாதீர்கள் அதை தானம் தர்மம் செய்யப் பயன்படுத்துங்கள்” என்று கூறினார்.
இதனால் நெட்டிசன்ஸ் கடுப்பாகி கோடிகளை கொட்டி படம் எடுப்பதைவிடுத்து மருத்துவமனை , பள்ளிகூடம் காட்டலாமே? உன் மாமனார் காசுல அந்த கோயிலை கட்டல ராஜராஜர் தன் பக்தியால் காட்டினார் என்று விளாசியுள்ளனர்.