கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் ஸ்தம்பித்து வருகின்றன. சீனாவில் உருவான இந்த கொரோனா வைரஸ் சீனாவினைத் தாண்டி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின், போன்ற நாடுகளில் பெரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் இந்தியாவில் கால் பதித்த கொரோனா தற்போது இந்தியாவினையும் ஆட்டிப் படைத்து வருகிறது. கொரோனாவின் தீவிரம் அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு இந்திய அரசாங்கம் முதல் கட்டமாக மார்ச் 24 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவினைப் பிறப்பித்தது. அதன்பின்னர் கொரோனாவின் தீவிரம் அதிகமானதைத் தொடர்ந்து 2 வது கட்டமாக ஊரடங்கானது மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கால் ஏழை எளிய மக்கள் உணவு உட்பட பல அடிப்படைத் தேவைகளுக்கும் பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், சினிமாப் பிரபலங்கள், தொண்டு நிறுவனங்கள், விளையாட்டு வீரர்கள், பிரபல நிறுவனங்கள், தன்னார்வலர்கள் எனப் பலரும் உதவிகளை செய்து வருகின்றனர்.
அந்தவகையில் நடிகர் பிரகாஷ் ராஜ் மக்களுக்கு காய்கறி , அரிசி போன்றவற்றினைத் பல லட்சக் கணக்கிலான மக்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறார். அந்த புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டதுடன், “ஊரடங்கால் தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற உதவியினை செய்தல் வேண்டும், என்னுடைய சொத்துகளே குறைந்தாலும் கடன் வாங்கியாவது மக்களுக்கு உதவி செய்வேன். என்னால் மீண்டும் சம்பாதிக்க முடியும். ஒற்றுமையுடன் போராடுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.
ரசிகர்கள் இவரது பதிவுக்கு லைக்குகளைப் போட்டதுடன், நீங்க வில்லன் இல்ல ஹீரோ என்று பதிவிட்டு வருகின்றனர்.