ஜி. வி. பிரகாஷ் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக, அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராகவும் வலம் வருகிறார். இவர் 2006 ஆம் ஆண்டு வெளியான வெயில் திரைப்படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமானார். அந்தப் படத்தில் இடம்பெற்ற வெயிலோடு விளையாடி பாடல் பெரிய அளவில் ஹிட் ஆக, ஒரே படத்தில் ஜி,வி,பிரகாஷ் பலராலும் அறியப்படும் பிரபலமானார்.
இவர் இசைப் புயல் ஏ. ஆர். ரஹ்மானின் அக்கா மகன் என்பதால், ஆரம்ப காலங்களில் சில படங்களில் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இசையமைப்பாளராக ஆக வேண்டும் என்ற கனவில் இருந்த ஜிவிக்கு ஏ. ஆர். ரஹ்மானின் இசையமைப்பில் ஜென்டில்மேன் திரைப்படத்தில் பாடும் வாய்ப்பு கிடைக்க பாடகனும் ஆனார்.
கிரீடம், பொல்லாதவன், சேவல், அங்காடித் தெரு, ஆயிரத்தில் ஒருவன் எனத் தொடர்ந்து தனது இசையமைப்பின் மூலம் பிரபலமான இவர் 2015 ஆம் ஆண்டு டார்லிங்க் படத்தில் ஹீரோவானார். அதிலும் அவருக்கு லக் அடிக்க, தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார்.
இவர் நடிப்பில் கடைசியில் வெளிவந்த 100% காதல் மாஸ் ஹிட்டானது, தற்போது கையில் ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே, ஜெயில், 4 ஜி, காதலைத் தேடி நித்யா நந்தா, காதலிக்க யாருமில்லை, பேச்சுலர் போன்ற படங்கள் உள்ளன.
இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது இசையில் அதிக பாடல்களைப் பாடிய சைந்தவியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சினிமாவில் முன் மாதிரியான தம்பதிகளுகளான இவர்களுக்கு நேற்று அழகானப் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியினை ஜிவி.பிரகாஷ் வலைதளங்களில் பதிவிட திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.