சமீபத்தில் நடைபெற்ற JFW சினிமா விருதுகள் நிகழ்ச்சியில் நடிகை ஜோதிகாவிற்கு சிம்ரன் விருது வழங்கினார். அதன்பின்னர் பேசிய ஜோதிகா, “தஞ்சை பெரிய கோயில் கட்டுவதற்கு கோடிக் கணக்கில் செலவு செய்வது தேவையற்றது, அந்தப் பணத்தில் மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடங்கள் கட்டுங்கள், கோயில் உண்டியலில் காசு போடாதீர்கள் அதை தானம் தர்மம் செய்யப் பயன்படுத்துங்கள்” என்று கூறினார்.
ஜோதிகாவின் இந்த அறிவுரையினை பலரும் ஏற்காத நிலையில் அவரை வலைதளங்களில் போதும் போதும் என்னும் அளவு திட்டித் தீர்த்து வருவதுடன் அவரது குடும்பத்தையும் சேர்த்து திட்டி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் உங்கள் மாமனாரிடம் இதுகுறித்து கேளுங்கள் என்று கூறியுள்ளார்.
எஸ்.வி.சேகர் கூறியதாவது, “மருத்துவமனை, நல்ல பள்ளிகள் அவசியமில்லை என்று யார் கூறினார்கள், இவருக்கு கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டா, ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது போன்ற விஷயங்கள் தெரியாது போலும்.
ஜோதிகா மெச்சூரிட்டி இல்லாமல் பேசுகிறார். அவர் சொல்வதை மற்றவர்களிடம் சொல்லாமல் அவரின் மாமனாரிடம் போய் செய்யச் சொல்லுங்கள்.” என்று கூறியுள்ளார்.
இதனால் கடுப்பான சூர்யா-ஜோதிகா ரசிகர்களோ கோயில் இருந்தால்தானே நீங்க பிழைக்க முடியும்? என்று பதிலுக்கு எஸ்.வி.சேகரை திட்டி வருகின்றனர்.