உலகமே கொரோனாவால் முடங்கியுள்ளது. இயல்பு வாழ்க்கை தாறுமாறாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் , பிரபலங்கள் பலர் லைவில் வருவது, உடற்பயிற்சி செய்வது, சமையல் செய்வது என கலக்கி வருகின்றனர்.
அந்த வகையில் ஒரு புது விளையாட்டாக தெலுங்கு திரையுலகம் ஒரு புதிய விசயத்தை ஆரம்பித்து வைத்துள்ளது.
ஏப்ரல் 19-ம் தேதி அன்று #BeTheRealMan என்ற ஹேஷ்டேகை உருவாக்கினார் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா. அதில் முதலாவதாக இயக்குநர் ராஜமெளலிக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்த சவால் என்னவென்றால் மனைவிக்கு உறுதுணையாக வீட்டு வேலைகள் பார்த்து வீடியோ வெளியிட வேண்டும்.
ராஜமெளலி இந்த சவாலை ஏற்று, வீட்டு வேலைகள் செய்த வீடியோவை வெளியிட்டு ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு பரிந்துரைத்தார். அவர்களும் இதை செய்தனர் அவர்களும் அடுத்து அடுத்து பலருக்கு இந்த ஹேஷ்டேகை பரிந்துரைத்த நிலையில் அது சுற்றி வளைத்து சிரஞ்சீவிக்கு சென்று அவரும் அதில் வெற்றி பெற்று இப்போது தன் நண்பரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இந்த ஹேஷ் டேக்கை பரிந்துரைத்துள்ளார்.
ரஜினிகாந்த் தன் வீட்டில் மனைவிக்கு சமையல் வேலைகள், வீட்டு வேலைகளில் உதவியாக இருந்து அதை புகைப்படம் எடுத்து பதிவிடுவாரா பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.