ரிபப்ளிக் டிவியின் தொகுப்பாளராக எடிட்டராக இருப்பவர் அர்னாப் கோஸ்வாமி. இவர் நெறியாளராக இருக்கும் நிகழ்ச்சியில் அவர் எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் முகத்திலடித்தாற்போல முதல்வன் அர்ஜூன் ரேஞ்சில் கேள்வி கேட்டு திக்கு முக்காட வைத்து விடுவார். அந்த அரசியல் கட்சியின் தவறுகளை நேரடியாக கொஞ்சம் கடுமையாக கேட்டு விடுவார்.
இவர் மீது இன்று அதிகாலை தாக்குதல் நடந்துள்ளது. இவர் மீதும் இவர் கார் மற்றும் மனைவி மீதும் தாக்குதல் நடந்துள்ளது.
நியாயமாக நடக்கும் அர்னாப் கோஸ்வாமி மீதான தாக்குதலை கண்டித்து #IsupportArnabGoswami என்ற ஹேஷ் டேக் உலக அளவில் ட்ரெண்டிங்க் ஆகி வருகிறது.
இதனிடையே இந்த பிரச்சினை தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.