வெள்ளை முடி வருவதற்கான உண்மையான காரணம் முடியின் வேர் பகுதியில் உள்ள மெலனின் என்னும் நிறமிப்பொருள், முடியின் நீளத்திற்கு உற்பத்தி செய்ய முடியாததால், முடியின் நிறம் மாறுபடுகிறது. வயதான காலத்தில் வரக்கூடிய வெள்ளை முடி தற்போது பலருக்கும் 30 வயதிலேயே வந்துவிடுகிறது. உடனே அதனை கருமையாக்க கண்ட, கண்ட ஹேர் டைகளை பயன்படுத்தி முடியை சீரழித்துக் கொள்கிறோம். இந்நிலையில்
- நெல்லிக்காயை சிறு துண்டுகளாக வெட்டி வெயிலில் உலர்த்தி, பின் அதனை எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை சூடேற்றி, ஸ்கல்ப்பில் படும்படி மசாஜ் செய்து வந்தால், வெள்ளைமுடி மறைவதை நன்கு காணலாம்.
- கறிவேப்பிலையை மோர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து அதனை தலையில் தடவி அரை மணிநேரம் ஊற வைத்து பின் குளிக்க வேண்டும். இப்படி வாரம் 2 முறை செய்து வந்தால், முடியில் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.
- 1 கப் ப்ளாக் டீயில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்துகலந்து, அதனைக் கொண்டு ஸ்கால்ப்பை நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலசவேண்டும். இப்படி வாரம் 2-3 முறை செய்துவந்தால், இள நரையை விரைவில் போக்கலாம்.
- வெந்தயம் அரைத்து பேஸ்ட் செய்து தலைக்கு தடவி ஊற வத்து அல்லது அதனை நீரில் இரவில் படுக்கும் போது ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைக் கொண்டு கூந்தலை அலசி வந்தால், நரைமுடி மறையும்.
- தயிரில் மிளகுத் தூள் சேர்த்து கலந்து அதனை தலை முடிக்கு தடவி ஊற வைத்து அலச வேண்டும். இதன் மூலமும் வெள்ளை முடி மறையும்.
- கரிசலாங்கண்ணி இலை, கறிவேப்பிலை இரண்டையும் தனித் தனியாக காயவைத்து பொடி செய்யவும்.இவை இரண்டிலிருந்தும் தலா 2 டீஸ்பூன் எடுத்து, அதனுடன் சிறிது எலுமிச்சை சேர்க்கவும்.