கில்லியை ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்

இளைய தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2004 ஏப்ரல் 14 தமிழ்ப்புத்தாண்டுக்கு வருவதாக இருந்த கில்லி திரைப்படம் திடீர் தாமதத்தால் 3 நாட்கள் கழித்து ஏப்ரல் 17ல்தான் ரிலீஸ் ஆனது. தெலுங்கில் வெற்றி பெற்ற…

இளைய தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2004 ஏப்ரல் 14 தமிழ்ப்புத்தாண்டுக்கு வருவதாக இருந்த கில்லி திரைப்படம் திடீர் தாமதத்தால் 3 நாட்கள் கழித்து ஏப்ரல் 17ல்தான் ரிலீஸ் ஆனது.

244958771064e4025d39238ffca1ccb1

தெலுங்கில் வெற்றி பெற்ற ஒக்கடு படத்தின் ரீமேக்தான் என்றாலும் தமிழுக்கேற்ற வகையில் மிக தரமாக இப்படத்தை இயக்கி இருந்தார் இயக்குனர் தரணி.

சமீபத்தில் கூட இயக்குனர் தரணி இப்படத்தை புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வாசலில் பீக் ஹவர்ஸில் படம் பிடிப்பது மிகவும் கடினம் எனஇரண்டு நாள் முன்பே சென்று சுற்றி உள்ள வீடுகள் கடைகளில் இரண்டு மூன்று இடங்களில் கேமரா வைத்து விட்டு வந்து உடனடியாக தடாலடியாக படமாக்கினாராம்.இதை ஒரு பத்திரிக்கையில் பகிர்ந்து கொண்டார். மக்கள் கூட்டத்தில் கோவில் வாசலில் அப்படியொரு ஆக்சன் காட்சியை படமாக்க முடியாதல்லவா அதனால்தான்.

படத்தின் ஓப்பனிங் தொடங்கி இறுதிவரை ரசிகர்களுக்கு செம தீனி போட்டது இப்படம் என்றால் மிகையில்லை. படத்தின் ஆக்சன் காட்சிகள் எவ்வளவு இருந்தனவோ அதற்கேற்றதுபோல் நகைச்சுவையிலும் விஜய் கலக்கி இருந்தார். இந்த வருடத்துடன் 16வது ஆண்டை நெருங்கும் இப்படத்தை விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் நம்பர் 1 ட்ரெண்டாக்கியுள்ளனர்.

மாஸ்டர் படத்தின் பாடல்களை கில்லி காட்சிகளுடன் சேர்த்து மாஸ் ட்ரெய்லர் எல்லாம் தயாரித்து உள்ளனர்.

விஜய் நடிப்பில் இப்படம் ஒரு மைல்கல்லான படம் என்றால் மிகையாகாது. த்ரிஷா, பிரகாஷ்ராஜ், ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்துக்கு மற்றொரு பலமாக திகழ்ந்தவர் இசையமைப்பாளர் வித்யாசாகர். இவர் இசையில் ஓப்பனிங்க் கபடி கபடி பாடலில் இருந்து அர்ஜூனரு வில்லு, கொக்கர கொக்கரக்கோ, அப்படி போடு உள்ளிட்ட பல வேகமான பாடல்கள் பெரிய மாஸ் காட்டின.

இப்படத்தை விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் போட்டி போட்டு ட்ரெண்டாக்கி வருகின்றனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன