விஷ்ணு விஷால் நடிப்பில் 2018ம் ஆண்டு வந்த திரைப்படம் ராட்சஷன். ஒரு வித்தியாசமான கதைக்களத்தை அடிப்படையாக கொண்ட இப்படம் பெரிய வெற்றி பெற்றது.படம் பார்த்த ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வரவைத்து அதில் கட்டிப்போட்டது.
நல்லதொரு பெயரையும் புகழையும் பெற்ற இப்படம் தெலுங்கிலும் வெளியானது. இந்நிலையில் விஷ்ணு விஷால் நேற்று வெளியிட்ட டுவிட்டில் இன்று மாலை 4 மணிக்கு எனது அடுத்த பட டைட்டில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
டைட்டில் ராட்சஷன் பட சாயலிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.இதை டைட்டில் ஸ்னீக் பீக் என அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்னீக் பீக் காட்சிகள் என்பது ரிலீஸ் ஆன திரைப்படத்தின் சில நிமிடங்கள் அடங்கிய காட்சியை குறிப்பது எனலாம். அது போல் முதல் முதலாக டைட்டிலுக்கு ஸ்னீக் பீக் வெளியிட்டுள்ளார் விஷ்ணு விஷால்.