விஜய் டிவியில் கடந்த 2004, 2005 போன்ற ஆண்டுகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி லொள்ளு சபா. சந்தானம் இந்த நிகழ்ச்சி மூலம்தான் சினிமாவுக்கு வந்தார்.
பல படங்களை கிண்டல் செய்து இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பபட்டது.பலரும் இந்த நிகழ்ச்சியை பார்த்து ரசித்துள்ளனர். இப்போது கொரோனா ஹாலிடேஸில் இது போன்ற பழைய நிகழ்ச்சிகளை விஜய் டிவி மறு ஒளிபரப்பாக செய்து வருகிறது.
இது குறித்து லொள்ளு சபா இயக்குனரும், தில்லுக்கு துட்டு,தில்லுக்கு துட்டு 2 பட இயக்குனருமான ராம்பாலா கூறுகையில் லொள்ளு சபாவுக்கு பிறகு விஜய் சேனல் எங்களைப் புறக்கணித்துவிட்டது. அதுதான் கசப்பான உண்மை. வெற்றிகரமான நிகழ்ச்சியை நடத்தியும் எங்களுக்கான அங்கீகாரம் எந்த வகையிலும் விஜய் டிவியிலிருந்து கிடைக்கவில்லை.
அதனால்தான் நான் எந்தப் படம் எடுத்தாலும் அதில் ‘லொள்ளு சபா’ குழுவினர் இடம் பெறுவதை உறுதி செய்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் ராம்பாலா.