கடந்த 1992ம் வருடம் ஏப்ரல் 13ல் ரிலீஸ் ஆனது சிங்காரவேலன் திரைப்படம்.இளையராஜாவின் பாவலர் கிரியேசன்ஸ் நிறுவனத்தின் சொந்த தயாரிப்பு படமான இப்படத்தை ஆர்.வி உதயக்குமார் இயக்க இளையராஜா இசையமைத்திருந்தார்.
அப்துல் ரகுமான் ஒளிப்பதிவு செய்ய அந்த நேரத்தில் சின்னக்கவுண்டர் மூலம் புகழ்பெற்றிருந்த ஆர்.வி உதயக்குமார் இப்படத்தை இயக்கி இருந்தார்.
உண்மையில் கிராமத்து படமான சின்னக்கவுண்டர் படத்தை இயக்கி இருந்த ஆர்.வி உதயக்குமாருக்கு இது முற்றிலும் மாறுபட்ட படம்.
வித்தியாசமான கதைக்களத்துடன் காமெடியாக இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. அத்தை பெண்ணை தேடி கண்டு பிடித்து இழந்து விட்ட குடும்ப உறவை மீட்கும் கலகலப்பான காமெடி படம்.
இதில் பாடகர் மனோ கமலின் நண்பராக நடித்திருந்தார். கமல்ஹாசன், குஷ்பு நடிக்க , கவுண்டமணி, சார்லி, வடிவேலு, பாடகர் மனோ,மனோரமா என களைகட்டி இருந்தது இப்படம் . கவுண்டமணியின் கவுண்ட்டர் வசனங்கள், அப்போதுதான் அறிமுகமாகி இருந்த ஒல்லியான வடிவேலுவின் நகைச்சுவை, என இப்படம் களை கட்டி இருந்தது.
இளையராஜாவின் இசையில் போட்டு வைத்த காதல் திட்டம், சொன்னபடி கேளு, இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்,புதுச்சேரி கச்சேரி, தூது செல்வதாரடி போன்ற பாடல்கள் நம்மை மெய்மறக்க செய்தன.
90களின் ரசிகர்கள் இன்றளவும் ரசித்து பார்க்கும் மறக்க முடியாத முழு நீள காமெடி பாடம் இது.
இந்த படம் வெளியாகி இன்றுடன் 28 வருடங்கள் ஆகி விட்டதாம்.கடந்த 1992ல் ஏப்ரல் 13ல் வெளியானது இப்படம்.