தெலுங்கில் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா.சில வருடங்களாக முன்னணி தெலுங்கு நடிகராக வலம் வரும் இவருக்கு ஆந்திரா முழுவதும் ரசிகர் ரசிகைகள் ஜாஸ்தி. பெண் ரசிகைகள் இவருக்கு மிகவும் அதிகம்.
இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் வெற்றி பெற்று வருவதால் தெலுங்கு சினிமாவில் செல்வாக்கு மிக்க நபராக இவர் வலம் வருகிறார்.
இவர் கோவிட் 19க்கு எதிரான லாக் டவுனில் இரவு பகல் பாராது மக்களை வழி நடத்தி தொடர்ந்து உழைத்து வரும் போலீஸ் அதிகாரிகளை மகிழ்விப்பதற்காக ஹைதராபாத்தில் உள்ள உயர் போலீஸ் அதிகாரிகளை கலந்து உரையாடினார்.
அவர்களின் மனச்சுமையை போக்கும் விதமாகவும் கோவிட் 19 குறித்தும் விஜய் தேவரகொண்டா உயரதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.