உங்களுக்கெல்லாம் அறிவே இல்லையா? குழந்தை நட்சத்திரம் ஆவேசம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் மானசா, கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ஆவேசமாக பேசியிருப்பது பெரும் பரபரப்பை…


4620fbaa99481f818a4adae95000c077-1

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் மானசா, கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ஆவேசமாக பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்த வீடியோவில் அவர் ’நீங்கள் எல்லோரும் படித்தவர்கள் தானே. உங்களுக்கெல்லாம் அறிவே இல்லையா? ஊரடங்கு உத்தரவு நேரத்தில் வெளியே போகக் கூடாது என்று அரசு இத்தனை சொல்லியும் வெளியே போய்க் கொண்டு இருக்கின்றீர்கள். நான் டிவி பார்க்கிறேன், கார் பைக்குகளில் குடும்பம் குடும்பமாக வெளியே செல்கின்றனர் இது ரொம்ப தப்பு

எங்களை போன்ற சின்ன குழந்தைகளே வீட்டில் இருக்கும்போது உங்களுக்கு என்ன வந்தது? என்று ஆவேசமாக கூறியுள்ளார் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன